Politics

உ.பி.,யில் கோவிட் அதிகரிப்பு; காங்., நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு


லக்னோ: உத்தர பிரதேசத்தில் கோவிட் பாதிப்புகள் அதிகரித்து வருவதையொட்டி, பல்வேறு இடங்களில் காங்கிரஸ் திட்டமிட்டிருந்த மாரத்தான் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதல்வர் யோகி பங்கேற்க இருந்த அரசு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பா.ஜ., சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதன் ஒருபகுதியாக காங்கிரஸ் சார்பில் நேற்று (ஜன.,4) பரேலியில் நடந்த மாரத்தான் ஓட்டத்தில் கூட்ட நெரிசலில் பல பெண்கள் தடுமாறி கீழே விழுந்தனர். கோவிட் பரவல் சூழலில் இந்த மாரத்தானில் சில பெண்கள் முகக்கவசம் அணியாமல் கூட்டமாக பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

latest tamil news

இதேபோல் நொய்டா, வாரணாசி உட்பட பல்வேறு இடங்களில் காங்., பொதுச்செயலாளர் பிரியங்கா தலைமையில் ‛நான் ஒரு பெண், என்னால் போராட முடியும்’ என்ற தலைப்பில் சுமார் 8 மாரத்தான் போட்டிகள் நடத்த காங்கிரஸ் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் கோவிட் பாதிப்ப எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதையொட்டி, இந்த மாரத்தான் நிகழ்ச்சியை ஒத்திவைத்துள்ளது.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், கவுதம் புத்த நகர் மாவட்டத்தில் நாளை நடைபெற இருந்த அரசு விழாவை ரத்து செய்துள்ளார்.

Advertisement

What's your reaction?

Related Posts

1 of 298