Politics

உ.பி.,யில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு காங்., கடிதம்


புதுடில்லி-கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், உத்தர பிரதேசத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும், காங்கிரஸ் ரத்து செய்துள்ளது.

latest tamil news

மேலும், ‘உ.பி.,யில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும்’ எனக் கோரி, தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.’ஒமைக்ரான்’நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. அத்துடன் உருமாறிய கொரோனா வைரசான ‘ஒமைக்ரான்’ பரவலும் அதிகரித்துள்ளது. இதனால், பல மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு உட்பட, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடக்க உள்ளன.

ஆனால், கொரோனா பரவல் அதிகரிப்பதால், இந்த தேர்தலை தள்ளி வைப்பது பற்றி தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என, அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தெரிவித்தது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில், ‘உத்தர பிரதேசம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் சட்டசபை தேர்தலை குறித்த காலத்தில் நடத்தப்பட வேண்டும்’ என, அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின.

இதையடுத்து உ.பி., உட்பட ஐந்து மாநில தேர்தல் பிரசாரங்களில் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், உத்தர பிரதேசத்தில் தேர்தல் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக காங்கிரஸ் நேற்று அறிவித்தது. இது பற்றி காங்கிரஸ் பொதுச் செயலர் வேணுகோபால் கூறியதாவது: கொரோனா மூன்றாவது அலை பரவல் துவங்கிவிட்டதாக சந்தேகிக்கிறோம். இதிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டும். அதனால், உத்தர பிரதேசம் உட்பட சட்டசபை தேர்தல் நடக்க உள்ள ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் தொடர்பான அனைத்து முக்கிய நிகழ்ச்சிகளையும் ரத்து செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திராவுக்கு காங்கிரஸ் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுஉள்ளதாவது: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், உத்தர பிரதேசத்தில் தேர்தல் கூட்டங்களை நடத்த கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். அரசு நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர், அரசியல் ரீதியிலான கருத்துக்களை தெரிவிப்பதை, தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

latest tamil news

நடவடிக்கை

இதற்கிடையே, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சருமான முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகையில், ”மாநில அரசுகள் தான் கொரோனா நிலைமையை ஆய்வு செய்து, தேர்தல் கூட்டங்களை நடத்த அனுமதிப்பதா, வேண்டாமா என முடிவு செய்ய வேண்டும்.”யாரும் அச்சப்பட தேவையில்லை. வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடித்தாலே போதும்; தொற்று பரவலை தடுத்துவிடலாம்,” என்றார்.

What's your reaction?

Related Posts

1 of 239

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *