in

உணர்ந்தது முட்செடி

விவசாயி ஒருவருக்கு மலை அருகே தோட்டமிருந்தது. அதில் துளசி பயிர் செய்துஇருந்தார். துளசி செடிகளுக்கு இடையேமுளைக்கும் களைகள், முட்செடிகள்ஆகியவற்றை பிடுங்கி எடுத்து துளசி செடிகைளைகண்ணும் கருத்துமாக பாதுகாத்துவளர்த்து வந்தார்.ஒரு நாள் துளசி செடிக்குஇடைேய வளர்ந்து இருந்த‌ ஒரு முட்செடி செடி ஒன்றைபிடுங்கி எறிந்தார். 

உடனே அந்த‌ முட்செடி கண்ணீர் விட்டு அழுதது.விவசாயிஅந்த‌ முட்செடியிடம் சென்ற போது அது சொன்னது” நான் தான் யாருக்குமே பயன்பட‌போவதில்லையே எந்த‌ திறமையும் இல்லாத‌என்னை ஏன் கடவுள் படைத்தார்.” என‌ வருத்தப்பட்டது. ”கடவுள் யாரையும் காரணம் இல்லாமல் படைப்பதில்லை.எலோருக்கும்திறமையும், பலத்தையும் கொடுத்து இருக்கிறார். 

அதை நாம் தான் கண்டுபிடித்துப‌யன் படுத்த‌ வேண்டும்” என்று விவசாயி சொல்ல.. ”என்ன‌ திறமைஇருக்க‌ போகிறது எங்கிட்ட‌, நானோ முட்செடி பிறரைகாயபடுத்துவேனோ   தவிர‌, வேறுயாருக்கும்உதவியாக‌ இருக்க‌ மாட்டேன்” என்று தன்னை இழிவாக பேசியது.மறுநாள் விவசாயி தன் தோட்டைத்திலிருந்தது பிடுங்கி எறிந்த‌ முட்செடிகளைஎல்லாம் ஒன்று சேர்த்து  தோட்டத்தை சுற்றி  வேலி அமைத்தார்.பின்பு அந்த‌ முட்செடியிடம் சென்று, ”நீ முட்செடி தான்  பிறறைகாயப்படுத்துபவன் தான். 

ஆனால் உன்னிடமும் திறமை இருக்கிறது பலமும்இருக்கிறது. அதனால் தான் இன்று இந்த‌ தோட்டைத்தையே பாதுகாக்கும்காவல்கார வேலியாக உயர்ந்துவிட்டாய்” என்று விவசாயிசொல்ல.. கடவுள் படைத்த எல்லா உயிர்களுக்குமே திறமையும் பலமும்  உண்டு என்பதை*உணர்ந்தது* *முட்செடி*

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Veteran

Written by Ganesh Ayyadurai

Video MakerImage MakerPoll MakerStory MakerContent Author

G.V.PRAKASH HITS | Tamil JUKEBOX | ஜி.வி.பிரகாஷ் பாடல்கள்