நமது உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாக கல்லீரல் இருக்கிறது. நீண்ட காலமாக நாம் கவனிக்காமல் இருக்க கூடிய உறுப்புகளில் ஒன்று தான் கல்லீரல்.
நமது வாழ்நாளை அதிகரிக்க கூடிய ஆற்றல் உள்ள இந்த உறுப்பை நாம் கொஞ்சம் கூட கண்டுகொள்வதில்லை. நாம் எடுத்து கொள்ளும் தேவையற்ற உணவுகள் கல்லீரலை முற்றிலுமாக சேதப்படுத்தி உயிரிழப்பு வரை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது போன்ற ஆபத்துகளில் இருந்து நமது கல்லீரலை பாதுகாக்க அதனை சுத்தம் செய்தாக வேண்டும்.
காபி
சரியான அளவில் காபி குடித்து வருவதால் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றும் பல ஆய்வுகள் கூறுகிறது. காபி போதுமான அளவு எடுத்து கொளவதால் கல்லீரலில் உருவாகும் நோயைத் தடுக்க முடியும் என்று சோதனை ஆய்வுகள் காட்டுகின்றன. காபி குடிப்பதால் கல்லீரலில் கொழுப்பு படிவதைக் குறைக்கிறது.
மஞ்சள் டீ
மஞ்சளில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளது. இதில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் நிறைந்துள்ளதால், நொதிகளின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனால் கல்லீரலில் படிந்துள்ள நச்சுக்களை அகற்ற கூடும்.
நெல்லிக்காய் சாறு
இதில் அதிக ஆன்ட்டி ஆக்சிடென்ட் உள்ளது. அத்துடன் உடல் உறுப்புகளில் வீக்கம் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். இதில் வைட்டமின் சி மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன. இவை நச்சுகளை வெளியேற்றி நமது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவுகின்றன.
பீட்ரூட் சாறு
பீட்ரூட் ஒரு ஊட்டச்சத்து நிறைந்த உணவாகும். இதை நமது உணவில் அவசியம் சேர்த்து கொள்ளலாம் என்று அறிவுறுத்துகின்றனர். இதில் ஃபோலேட், பெக்டின், பீட்டாலைன்கள் மற்றும் பீடைன் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் இருந்து நச்சுக்கழிவுகளை அகற்ற உதவும்.
This post was created with our nice and easy submission form. Create your post!