இலங்கை அரசை கவிழ்க்க 120 உறுப்பினர்கள் தயார்!

3 week_ago 9
ARTICLE AD BOX

 இலங்கை அரசு, கவிழ்க்க, 120 உறுப்பினர்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

கொழும்பு:ஊஇலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்ற தேவையான, 113க்கும் மேற்பட்ட எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதாக அதிருப்தி எம்.பி.,க்கள் தெரிவித்தனர்.

நம் அண்டை நாடான இலங்கையில் அன்னிய செலாவணி தட்டுப்பாடு ஏற்பட்டதால், அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் தவறான நிர்வாகத்தினால் இந்த நிலை ஏற்பட்டதாக அவர்களது கூட்டணி கட்சி மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

latest tamil news


அதிபர் மற்றும் பிரதமருக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உறுப்பினர்களின் ஆதரவை கோரும் முயற்சியில் பிரதான எதிர்கட்சியான சமகி ஜன பாலவேகயா ஈடுபட்டது.

பார்லி.,யில் மொத்தம் 225 உறுப்பினர்களை உள்ளனர். இதில், 113 உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால், அரசுக்கு எதிரான நம்பிக்கை ஓட்டெடுப்பு வெற்றி பெறும்.இந்நிலையில், எதிர்கட்சியினர் அரசுக்கு எதிராக 113 உறுப்பினர்களின் ஆதரவு பெற்றால் அரசை அவர்களிடம் ஒப்படைப்பதாக அதிபர் கோத்தபய தெரிவித்தார். 'ஆனால் அதிபர் பதவியில் இருந்து விலக மாட்டேன்' என, கூறினார்.இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பில் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க 120 உறுப்பினர்களின் ஆதரவை திரட்டி உள்ளதாக, முன்னாள் அமைச்சர்கள் உதயா கம்மன்பிலா மற்றும் விமல் வீரவன்சா தெரிவித்துள்ளனர்.

Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை

Kasimani Baskaran எப்படியாவது உருப்பட்டால் நல்லது. இந்தியாவுடன் இணைந்தால் நல்ல வருங்காலம் உண்டு.

Cancel

×

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.

4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

read-entire-article