இப்போது படிப்பதும் இப்போது எழுதுவதும்

1 month_ago 18
ARTICLE AD BOX
<?php // } ?>

பேருந்து பயணத்தில் வாசித்து முடிக்கக்கூடிய சிறிய புத்தகம் சீர்ஷேந்து முகோபாத்யாயவின் ‘அத்தைக்கு மரணமில்லை’ நாவல் (தமிழில் தி.அ.ஸ்ரீனிவாஸன், காலச்சுவடு வெளியீடு). முன்பு கிழக்கு வங்காளத்தில் ஜமீன்தார்களாக வாழ்ந்த குடும்பம். வேலை எதுவும் செய்யாமல் நகை, சொத்துக்களை விற்றுத் தின்று ஆடம்பரங்களில் அழியும் இறுதித் தருணம். ஏழைக் குடும்பத்திலிருந்து வந்து வாழ்க்கைப்பட்ட சோமலதாவின் பார்வையில் கதை நகர்கிறது. அத்தை ஆவி வடிவில் மாறும் பெண்குரலாகக் கதை நகர்த்தும் உத்தி நாவலை இன்றைய எழுத்தாக்குகிறது.

திருவிதாங்கூரில் மருமக்கள் வழியில் ஆட்சி பிடித்த மார்த்தாண்ட வர்மாவின் வெற்றிகளுக்கு உடனிருந்த பாதுகாவலனும் வர்மக் கலைஞனும் நூற்றியெட்டுக் களரிக்கு ஆசானுமான அனந்தபத்மநாபனின் வீரத்தையும் வீழ்ச்சியையும் பேசும் நாவல் ஒன்று எழுதிக்கொண்டிருக்கிறேன். 1741 ஜுலை 31 அன்று குளச்சல் போரில் போர்த்துக்கீசிய தளபதி டிலெனாயை வென்றது, காயங்குளம் முதல் கொச்சி வரையிலான எல்லை விரிவாக்கம், டிலெனாயால் கிறித்தவம் தழுவிய தேவசகாயம் பிள்ளையின் மரணம் என விரியும் நாவலின் பெயர் ‘அயினியோட்டுத் தம்புரான்’.

<?php // } ?>
read-entire-article