Movies

இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்துறதுனு தெரியல – புகழ் நெகிழ்ச்சி


‘வலிமை’ படத்தில் நடித்தது குறித்து ‘குக் வித் கோமாளி’ புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்

அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தில் ஹியூமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்குத் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ‘வலிமை’ படத்தின் ட்ரெய்லர் இணையத்தில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்றது. 2 நிமிடம் 50 நொடிகள் ஓடக்கூடிய இந்த ட்ரெய்லர் வெளியான ஒருசில நிமிடங்களிலேயே லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்றது.

‘வலிமை’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ‘குக் வித் கோமாளி’ புகழ் நடித்துள்ளார். படத்தின் ட்ரெய்லரிலும் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார்.

இந்நிலையில் ‘வலிமை’ படத்தில் நடித்தது குறித்து புகழ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“அஜித் சார்… இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்துறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்குற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்.

என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்


What's your reaction?

Related Posts

1 of 298