Politics

அந்த மக்கள் சக்தி தான், உங்கள் ம.தி.மு.க.,வை இன்னமும், அதே இடத்தில் அப்படியே வைத்திருக்கிறதோ?


ம.தி.மு.க., தலைமை நிலைய செயலர் துரை வைகோ பேட்டி: ‘எத்தனை கட்சிகள் ஒன்று சேர்ந்தாலும், எங்களை தோற்கடிக்க முடியாது’ என்கிறார், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை. வெற்றியை அவரோ, நானோ தீர்மானிக்க முடியாது. மக்கள் சக்தி ஒன்று சேர்ந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்.

அந்த மக்கள் சக்தி தான், உங்கள் ம.தி.மு.க.,வை இன்னமும், அதே இடத்தில் அப்படியே வைத்திருக்கிறதோ?

அரசு மருத்துவர்களுக்கான சட்டபோராட்ட குழுவின் தலைவர் டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை அறிக்கை: தமிழகத்தில் மருத்துவ பேராசிரியர்களாக பணியில் இருந்த 600 பேர், விதிகளுக்கு முரணாக பணியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் துறை அமைச்சர் தலையிட வேண்டும்.

தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லுாரிகள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ பேராசிரியர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளது ஆச்சரியமாக உள்ளது. இந்த பிரச்னையில் மறைமுக விவகாரங்கள் ஏதேனும் இருக்குமோ?

தமிழக காங்., – எம்.பி., மாணிக்கம் தாகூர் பேட்டி: பிரதமராக இருந்த ராஜிவுக்கு பின்,இப்போது தான், மற்றொரு பிரதமரான மோடி, விருதுநகர் வருகிறார். மருத்துவ கல்லுாரியை திறக்க வரும் அவரை வரவேற்கிறேன்.

ராஜிவுக்கு பின், நரசிம்ம ராவ், தேவகவுடா, மன்மோகன் சிங் என, ஏழு பேர் பிரதமர்களாக இருந்தும், தமிழகத்தின் முக்கிய நகரமான விருதுநகர் செல்லாதது ஆச்சரியமாக உள்ளது. அந்த, ‘சாதனையை’ பிரதமர் மோடி தகர்க்கிறாரோ?

தமிழக காங்., தலைவர் கே.எஸ்.அழகிரி பேச்சு: சனாதன தர்மம் என்பது சமூகத்தில்நிலவும் வேறுபாடுகளை நியாயப்படுத்துகிறது. இது, ஹிந்து மதத்தில் ஏற்பட்ட இடைச்சொருகல். எந்த நாகரிகசமூகமும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை.

latest tamil news

சனாதன தர்மத்திற்கு வாய் இருந்தால் அழுதிருக்கும். திருமாவளவன் துவங்கி, ராகுல், நீங்கள்வரை புதுசு புதுசாக கருத்து தெரிவிக்கத் துவங்கி விட்டீர்களே!

தி.மு.க., செய்தி தொடர்பாளர்கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: கும்பகோணம் அருகே அரசு திறந்தவெளி நெல் சேமிப்புக்கிடங்கில் பாதுகாப்பான முறையில் நெல் மூட்டைகள் வைக்கப்படாததால், மழையில் 40 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்துள்ளன.

1 கோடி ரூபாய் வரை அரசுக்கு இழப்பு.ஆட்சிக்கு வந்ததும் எல்லாவற்றையும் சரிசெய்து விடுவோம் என்றவர்கள், இதுவரை சரிசெய்யாதது விவசாயிகளுக்கும், நாட்டுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டதே!

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: சென்னை எண்ணுாரில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கும் திட்டத்திற்காக, நாளை மக்கள் கருத்துக்கேட்பு கூட்டத்தை தமிழக அரசு நடத்த உள்ளது கண்டனத்திற்குரியது. கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், கருத்துக்கேட்பு கூட்டத்தை நடத்துவது தவறு!

கொரோனா கட்டுப்பாடுகள், கெடுபிடிகள் எல்லாம் அப்பாவி பொதுமக்களுக்கும், பிற கட்சிகளுக்கும் தான் என்பதை, ஆட்சியாளர்கள் முடிவு செய்துவிட்டனர்; நீங்கள் உணரவில்லையோ?

What's your reaction?

Related Posts

1 of 298