ARTICLE AD BOX
புதுடில்லி : நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 7.5 – 8 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும், இந்த வளர்ச்சிக்கு, ஏற்றுமதி உதவுவதாக இருக்கும் என்றும், சி.ஐ.ஐ., எனும், இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் டி.வி.நரேந்திரன் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:
நாட்டின் பொருளாதாரம், நடப்பு நிதியாண்டில் 7.5 – 8 சதவீதமாக உயரும். அதிகரித்து வரும் ஏற்றுமதி, இதற்கு முக்கிய காரணமாக அமையும்.இருப்பினும், கொரோனாவின் அடுத்த தாக்கம் மற்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரினால் ஏற்படும் தாக்கம் ஆகியவற்றை எதிர்கொள்ள, நாடு தயாராக இருக்க வேண்டும்.அதே சமயம், கொரோனாவை முன்னிட்டு, பெரிய அளவிலான தடைகள் மீண்டும் விதிக்கப்படாது என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.